Advertisment

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

trichy road accident incident police investigation started 

திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சி ஃபிலோமினாபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 50). இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் மேம்பாலம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகேதனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே வந்த அடையாளம் தெரியாதவாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

இது குறித்து சண்முகத்தின் மனைவி கவிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சிதெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீம் வழக்குப்பதிவுசெய்து, விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணைசெய்து வருகின்றனர். இச்சம்பவம்அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

police trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe