trichy railway colony railway staff bus incident

Advertisment

திருச்சியில்நடந்த விபத்து ஒன்றில் திருமணமாகி 10 மாதங்களே ஆன ரயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்மகன் மோகன் (வயது 35). இவருக்கு பிரியா (வயது 27) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 10 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் இன்று (18.04.2023) அதிகாலை ரயில்வே ஊழியரான மோகன் திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள ரயில்வே குடியிருப்பில் இருந்து அருகில் உள்ள முனீஸ்வரன் கோவில் பகுதியில் குடிநீர் எடுப்பதற்காகச் சென்றுள்ளார்.

அங்கிருந்து குடிநீர் எடுத்துவிட்டு மீண்டும் வீட்டுக்குத்திரும்பிச் செல்கையில் சாலையைக் கடக்கும் போது திருச்சி தலைமை தபால் நிலையத்திலிருந்து ஜங்ஷன் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டமோகன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.