20 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படத்தை காட்டி ஆதரவு உங்களுக்கு தான் என்று திருநாவுக்கரசரை நெகிழ வைத்த முதியவர்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் அடங்கும். அதனால் திருச்சி தொகுதி வேட்பாளர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் தங்கள் பிரச்சாரங்களை தொடங்கி உள்ளனர்.

t

இன்று தி.மு.க கூட்டணி கட்சிகளின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் பூங்குடி கிராமத்தில் பிரசாரம் செய்து தனக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற ஒரு முதியவர் மழைத் தண்ணீரில் நனைந்து படம் உருவங்கள் தெளிவாக தெரியாத பழைய படத்துடன் திருநாவுக்கரசரிடம் வந்து 20 வருசத்துக்கு முன்னால உங்க கூட நான் படம் எடுத்துக் கொண்டேன். அந்த படத்தை இப்பவும் வீட்ல வச்சு பாதுகாக்கிறேன். கஜா புயலில் மழை தண்ணீரில் நனைந்து படம் இப்படி ஆகிவிட்டது என்று சொன்னவர், என் ஓட்டு உங்களுக்கு தான் என்று ஆதரவு தெரிவித்தார். இதைப் பார்த்த திருநாவுக்கரசர் நெகிழ்ந்து அந்த முதியவரை கட்டி அணைத்துக் கொண்டார்.

t

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அந்த இடத்தில் நின்ற அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன் பிறகு இதே போல ஒவ்வொரு வீட்டிலும் என்னுடன் எடுத்துக் கொண்ட படங்கள் இருக்கும். நான் எளிமையானவன் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் என்றார்.

trichy puthukottai thirunavukkarasar
இதையும் படியுங்கள்
Subscribe