இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்! சிறுமியிடம் அத்துமீறிய நபரைத் தேடும் காவல்துறை! 

Trichy police registered case on vellore youth on pocso

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு, இன்ஸ்டாகிராம் மூலம் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் என்ற வாலிபருடன் இவருக்கு அறிமுகமாகி அவர்கள் தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி கோகுல் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனக்கு வீட்டில் வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்துள்ளார்கள் என்றும், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டல் பெயர் சொல்லியுள்ளார். மேலும், அந்த ஹோட்டலின் குறிப்பிட்ட அறையில் திருமணம் நடப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பி அந்த மாணவியும் அந்த அறைக்கு சென்றுள்ளார்.

அங்கு அந்த மாணவியை அவர் வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததோடு வீடியோவும் எடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி, அவரது தாயிடம் நடந்ததை கூறியுள்ளார். அதையடுத்து கடந்த 9ஆம் தேதி கோகுலிடம் மாணவியின் தாய் பேசியுள்ளார். ஆனால் இணையதளத்தில் படங்களை பகிராமல் இருக்க வேண்டும் என்றால் 10 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார் கோகுல்.

இந்நிலையில் மாணவி திருவெறும்பூர் அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கோகுல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கோகுலை தீவிரமாக தேடிவருகின்றனர்.

POCSO police trichy
இதையும் படியுங்கள்
Subscribe