Trichy police officers relocated ... eyebrow-raising dignitaries!

Advertisment

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வரும் நிலையில் காவல்துறையிலும் பல புதிய அதிகாரிகளை நியமிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மேலும் பலரை பணியிடமாற்றம் செய்யும் நடவடிக்கையும் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. மாநகர் மற்றும் புறநகரின் முக்கிய தகவல்களை பரிமாறும் துறை அதிகாரிகளை மற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அதன்படி, திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக தேவராஜ் நியமிக்க பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் திருச்சி கோட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராகவும், ஆய்வாளராகவும் பணிபுரிந்து பின்னர் பெரம்பலூர் குற்றப்புலனாய்வு தனிப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி உள்ளார். மேலும் திருச்சி புறநகர் குற்றப்புலனாய்வு பிரிவிலும் பணியாற்றி உள்ளார்.

மேலும் திருச்சி மாநகர குற்றப் புலனாய்வு தனிப்பிரிவு ஆய்வாளராக பாரி மன்னன் நியமிக்கபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.இவர் ஐ.ஜி இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட சில சர்ச்சைகள் இவர் மீது உள்ளது.

Advertisment

தற்போது இதுகுறித்த பேச்சு காவலர்கள் மத்தியில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வந்தாலும் பாரி மன்னன்பெயர்அடிபடுவதால் காவல்துறையில் இருக்கும் அதிகாரிகளும் சற்று புருவத்தை உயர்த்துகின்றனர்.