Advertisment

ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்பா? திருச்சியில் இருவரிடம் போலீஸ் விசாரணை

Trichy police in investigation two people

திருச்சி இனாம்குளத்தூரில் சாகுல் அமீது மற்றும் ஷர்புதீன் என்ற இருவர் தடை செய்யப்பட்ட அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். முகநூல் பக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு லைக் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் இவர்கள் வீட்டில் சோதனை நடத்தினர்.

Advertisment

இந்நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்புடன் ஏற்கெனவே தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் இனாம்குளத்தூரைச் சேர்ந்த சாகுல் அமீது மற்றும் ஷர்புதீன் ஆகிய இருவரிடமும்சந்தேகத்தின் பேரில் தமிழக காவல்துறை இயக்குநர் அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்ட ஜீயபுரம் டி.எஸ்.பி. பாரதிதாசன், ராம்ஜி நகர் காவல் ஆய்வாளர் வீரமணி, சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் உதயகுமார், ஜீயபுரம் காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் தலைமையில் 30 போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மூன்று மணி நேரம் நடந்த சோதனையில் இருவரிடமிருந்து ஹார்டுடிஸ்க், 2 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisment

police trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe