திருச்சி மாநகர மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளர் சுதா மற்றும் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட மது பாட்டில்களைக் கைப்பற்றிதனியாக வெளியே விற்பனை செய்வதாகப் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக மாநகர காவல்துறை ஆணையர் அருண் விசாரணை நடத்தஉத்தரவிட்டார். அதன் அடிப்படையில் ஆய்வாளர் சுதா, திருச்சி கட்டுப்பாட்டு அறைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உதவியாக இருந்த உதவி ஆய்வாளர் சந்திரசேகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.