Trichy Police Commissioner's action! Offenders arrested regularly

திருச்சி மாநகரத்தில் காந்தி மார்க்கெட், பொன்மலைப்பட்டி ஆகிய இடங்களில் கடந்த வாரங்களில் அடுத்தடுத்து இரண்டு கொலைசம்பவங்கள் நடைபெற்றன. இந்தச் சம்பவங்களின் எதிரொலியாக, மாநகரில் வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் கைதாகி தற்போது ஜாமீனில் சுற்றித்திரியும் ரவுடிகள் சிறப்புப் பதிவேடு குற்றவாளிகளைக் கைது செய்ய மாநகரக் காவல்துறை ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, மாநகரம்முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக அதிரடி வேட்டை நடந்தது. முதல் நாளில் இரு ரவுடிகளும், இரண்டாவது நாளில் 42 ரவுடிகளும் கைது செய்யப்பட்டனர். மேலும், சரித்திர பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் 31 பேரும், பல்வேறு திருட்டு சம்பவங்களில் தலைமறைவாக இருந்த 38 பேரும் கைது செய்யப்பட்டனர். கைதான ரவுடிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட உள்ளனர்.

Advertisment