Advertisment

திருச்சியில் பாலியல் தொழில் வழக்கில் சிக்கியவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை..!

Trichy Police commissioner order to take action under Gundas

திருச்சியில் கடந்த ஆறு மாத காலமாக அழகு நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவ்வப்போது இதுபோன்ற இடங்களில் காவல் துறையினர் அதிரடியாக சோதனை செய்து அவர்களைக் கைது செய்து பெண்களைப் பாதுகாப்பு இல்லங்களில் சேர்த்தாலும், மீண்டும் அவர்கள் இந்த தொழிலில் ஈடுபடுவதைத் தடுக்க முடியவில்லை.

Advertisment

இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனை சுற்றியுள்ள வயலூர் ரோடு பகுதி குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக திருச்சி விபச்சார தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

Advertisment

அதில், இதே பகுதியில் தனியாக வீடு எடுத்து ராஜேஷ் என்பவர் மூன்று பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது தெரிய வந்ததையடுத்து காவல்துறையினர், ராஜேஷை கைது செய்தனர். மேலும், இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதால் திருச்சி மாநகர ஆணையர் அருணின் உத்தரவின்படி தற்போது இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

goondas act trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe