Skip to main content

லாட்டரி சீட்டு விற்பனை; திருச்சி போலீசார் அதிரடி

 

trichy police action taken by secret action

 

திருச்சி மாவட்டம் தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதாக தில்லை நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

 

அப்போது குழுமணி சாலையில் 3 பேர் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக அண்ணா நகரைச் சேர்ந்த இடியமின் பர்ஹத்துல்லா (வயது 46) மற்றும் பாலக்கரையைச் சேர்ந்த ஜாகிர் உசேன் (வயது 58) மற்றும் முகமது இஸ்மாயில் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார், பர்ஹத்துல்லா மற்றும் ஜாகிர் உசேன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய முகமது இஸ்மாயிலை போலீசார் தேடி வருகின்றனர்.  கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.4,500 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !