trichy police action taken by komban jegan issue

திருச்சியில் பல்வேறு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

Advertisment

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கொம்பன் ஜெகன். ரவுடி கொம்பன் ஜெகன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்படிதிருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே இருந்தரவுடி கொம்பன் ஜெகனை போலீசார் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது ரவுடி கொம்பன் ஜெகன் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதனால் தற்காப்புக்காக போலீசார் ரவுடி கொம்பன் ஜெகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

Advertisment

காவல் உதவி ஆய்வாளர் வினோத்தை தாக்கிவிட்டு ரவுடி கொம்பன் ஜெகன் தப்ப முயன்ற போது போலீசார் என்கவுண்டர் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் சம்பவத்தில் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் வினோத்லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் விசாரணைமேற்கொண்டுள்ளார்.பல்வேறு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ரவுடி கொம்பன் ஜெகன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் திருச்சி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.