trichy periyar statue bjp tamilnadu leader l murugan

Advertisment

பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு பா.ஜ.க. வின் தமிழக தலைவர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்களால் காவிச்சாயம் பூசப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த மணிகண்டம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக பா.ஜ.க.வின் தமிழக தலைவர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அநாகரிக செயலை யார் செய்திருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும். அனைவரையும் அரவணைக்கும் தியாகப் பண்பின் குணமே காவி; அதை தவறான சிந்தனையில் பயன்படுத்துவது பண்பல்ல" என தெரிவித்துள்ளார்.