Advertisment

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் திறக்க கோரிக்கை; ஆட்சியரிடம் பாஜகவினர் மனு

trichy perarasar perumbidugu mutharaiyar memmorial hall open request bjp to collector  

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவிற்கு முன்னரே திறக்கப்பட வேண்டிய நிலையில் இருந்த மணிமண்டபம் ஓராண்டு காலத்திற்கு மேலாகியும் தற்பொழுது வரை இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

Advertisment

வருகின்ற மே 23ஆம் தேதி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவிற்கு முன்னதாக மணிமண்டபத்தை திறக்க வேண்டும் எனக் கூறி பாஜக திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாஜகவினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

Advertisment

மனு அளிக்க திருச்சி மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் காளீஸ்வரன், ஒண்டி முத்து பொன். தண்டபாணி. மாவட்ட நிர்வாகிகள் சந்துரு, மணிமொழி சர்வேஸ்வரன், ஜெயந்தி நாகேந்திரன், வேளாங்கண்ணி, மாவட்ட ஊடக பிரிவு தலைவர் சி. இந்திரன், பாலக்கரை.மண்டல் தலைவர் மல்லி செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Memorial trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe