trichy painter incident four children involved issue

Advertisment

திருச்சி கொட்டப்பட்டு இந்திரா நகரை சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன் ராஜ்குமார் (வயது 30). இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் திருச்சி பொன்மலை பட்டியில் உள்ள ஒரு டிரைவிங் பள்ளி அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கத்தி முனையில் இவரிடம் மிரட்டி பணத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்து ராஜ்குமார் பொன்மலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் திருச்சி பொன்மலை, பொன்மலைப்பட்டி, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களை பொன்மலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழிப்பறி சம்பவத்தில் 4 சிறுவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.