திருச்சியில் முன்விரோதம்காரணமாக ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி ஓயாமரி மயானத்தில் உள்ள காலபைரவர் கோவில் முன்பாக விளக்கு விற்பனை செய்யும் கடை போடுவதில் அருண்பிரசாத் - சத்தியராஜ் ஆகிய இரு ரவுடிகளிடையே முன்விரோதம் இருந்துள்ளது. இன்று அருண்பிரசாத் என்பவரின் தந்தை ராஜேந்திரனை சத்தியராஜின் உறவினர்கள் தாக்கி மண்டையை உடைத்தனர். அதனைத்தொடர்ந்து திருச்சி தேவதானம் பகுதியில் உள்ளசத்தியராஜ் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சத்தியராஜின் தந்தை தனபாலை அரிவாளால் மார்பில் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து திருச்சி கோட்டை காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தனபால் என்பவரை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்த குற்றவாளிகளை கோட்டை காவல்நிலைய போலீசார் தேடி வருகிறார்கள்.