trichy old lady passed away... police investigation on her son

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பாரதியார் நகரில் வசித்து வந்தவர் பெரியசாமி மனைவி ராஜேஸ்வரி(74). இவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தோல் நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரது மகன் முருகானந்தம் பராமரிப்பில் இருந்து வந்த மூதாட்டி இன்று காலை உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.

Advertisment

தோல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாக சொல்லப்படும் மூதாட்டியை அவரது மகன், தனது இல்லத்தில் இருந்து சக்கர நாற்காலியில் உயிரிழந்த தாயை அமர வைத்து செவலூர் பகுதியில் இருக்கும் மயானம் வரை 4 கிலோ மீட்டர் தள்ளிச் சென்றார். இந்தச் சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment