திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் பாரம்பரிய மையம் திறப்பு விழா இன்று (25.11.2021) நடைபெற்றது.இதில், தேசிய தொழில்நுட்ப கழகத்தின் நிர்வாகக்குழுத் தலைவர் பாஸ்கர் பட் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். நிர்வாகக் குழுத் தலைவர் பாஸ்கர் பட் இதனைத் திறந்துவைத்தார்.இதனைத்தொடர்ந்து, என்.ஐ.டி. திருச்சி முன்னாள் மாணவர் சங்கம் (ஆர்.இ.சி.ஏ.எல்) தலைவர்மகாலிங்கம், இப்பாரம்பரிய மையத்தின் கட்டட வடிவமைப்பாளர் ஜோசப் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வின் நிறைவாக ‘தி ரோட் அஹெட்’என்ற தலைப்பிலான புத்தகம் வெளியிடப்பட்டது.