/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/art-img-villupuram_11.jpg)
திருச்சியில் குடும்பத்தகராறில் மனைவியைகொலை செய்த கணவனுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனைஅளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், துலையாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). இவரது மனைவி கோமதி. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ரமேஷ் தனது மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இந்த கொலைசம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தபோலீசார் ரமேஷை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக 28 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி,ரமேஷ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தொகை 2000 ரூபாயை கட்டத்தவறினால், மேலும் ஆறு மாத காலம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இந்த வழக்கு தாக்கல் ஆன நாளிலிருந்து 136 நாட்களுக்குள்முடித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)