Skip to main content

நோட்டமிட்ட கொள்ளையர்கள்; திருவிழாவுக்கு சென்றுவிட்டு திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி 

 

trichy musiri azhagu perumalpatti incident 

 

பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் முசிறியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அழகு பெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவி, குழந்தைகளுடன் பொன்னாங்கண்ணிபட்டி பகுதியில் நடைபெற்று வரும் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு புறப்பட்டுச் சென்றார். பின்னர் சாமி தரிசனம் முடித்துவிட்டு இரவு வீடு திரும்பினர்.

 

அப்போது வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், 3 பவுன் செயின் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. வீட்டின் உரிமையாளர்கள் வெளியூர் செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இது தொடர்பாக முசிறி போலீசில் மணிமாறன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !