திருச்சி முக்கொம்பில் கொள்ளிடத்தில் இருந்து 3,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. திருச்சி முக்கொம்பிற்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 40,000 கனஅடியாக இருக்கிறது. கொள்ளிடத்தில் நீர் திறப்பால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல். மேலும் முக்கொம்பிற்கு காவிரி நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வாத்தலை பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு.

Advertisment

trichy mukkombu water dam water released cauvery raised

அதன் தொடர்ச்சியாக திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையம் மூடப்பட்டது.மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதாலும் முக்கொம்பிற்கு வரும் காவிரி நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கொள்ளிடம் முக்கொம்பில் வடக்கே உள்ள 10 மதகுகள் வழியாக நீர் திறந்துவிடப்படுகிறது.