Advertisment

ரூ. 1 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை வழங்கிய அமைச்சர்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ. 1கோடியே 8 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

Advertisment

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருமற்றும்பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ரூபாய் 50 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்திய வாகனங்களை 60 பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

Advertisment

இதே போல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளுக்கும் ரூபாய் 47 லட்சத்து 19,000 செலவில் குப்பை அள்ளும் வாகனங்களையும் அமைச்சர்கள் வழங்கினார்கள். இதையடுத்து திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அடுத்துள்ள பாளையூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கம்மாள் என்பவர் பாம்பு கடித்து இறந்தார். அவருக்கு தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூபாய் 1 லட்சத்தை அமைச்சர்கள் வழங்கினர்.

அதனைத்தொடர்ந்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மனுக்கள் வழங்க வரும் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் பயன்பெறும் வகையில் ரூபாய் 4 லட்சம் 79 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் வாகனத்தையும் அமைச்சர்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர். மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் திருச்சி மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவி சங்கத்திற்கு ரூ 5 லட்சத்து 25ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார்கள். ஒட்டு மொத்தமாக ஒரு கோடியே 8 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை அமைச்சர்கள் வழங்கினர்.

collector office WELFARE kn nehru anbil mahesh trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe