Advertisment

திருச்சியில் முதல்வர் நிகழ்ச்சிக்கான இடத்தை ஆய்வு செய்த அமைச்சர்கள்

trichy ministers inspection on chief minister function 

தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் மக்களுக்குநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கானமுன்னேற்பாட்டு பணிகளை அமைச்சர்கள்ஆய்வு செய்தனர்.

Advertisment

திருச்சியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இம்மாதம் 29 ஆம் தேதி திருச்சி செல்ல உள்ளார். இதற்கான விழா நிகழ்வுதிருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.இதில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கியும், முடிவுற்ற பணிகளைத்தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல்நாட்டவும்உள்ளார்.

Advertisment

இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்துநகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும்மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நிகழ்ச்சிநடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe