Trichy Mayor has ordered remove rajarajan street encroachments

திருச்சியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 58வது வார்டு பகுதியில் ராஜராஜன் நகா் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வருபவர்களில் பலா் பணியின் நிமித்தம் வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் வசித்து வருகின்றனா். இந்நிலையில், அவா்களுக்கு சொந்தமான இடங்களை சட்டவிரோதமாக அப்பகுதியை சோ்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் கலைவாணன் மற்றும் கோவையை சேர்ந்த கந்தசாமி ஆகியோர் இணைந்து ஆக்கிரமிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisment

அதனை தொடர்ந்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது பாதையை அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பொது பாதையைத் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனா். ஆனால் அவா் செவி சாய்க்காததால், இன்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் வட்ட செயலாளர் கிராப்பட்டி செல்வம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற கலைவாணனுக்கு உத்தரவிட்டார்.

Advertisment