trichy manapparai bakery worker online game incident 

Advertisment

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் தமிழகத்தில் மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் வில்சன்.26 வயதாகும் வில்சன் வையம்பட்டி காவல் நிலையம் எதிரே உள்ள தனியார் பேக்கரியில் பலகாரம் தயாரிக்கும் வேலையில் இருந்து வந்துள்ளார். இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டதாகவும்,அதனால் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கடன் வாங்கி சுமார் மூன்று லட்சத்திற்கு மேலாக இழந்ததாகவும் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாத வில்சன், நேற்று முன்தினம் மீண்டும் பேக்கரிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று தனது தாயார் வீடான அஞ்சல்காரன்பட்டிக்கு சென்ற வில்சன், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அருகில் இருந்த உறவினர்களால் மீட்கப்பட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த வில்சன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வில்சன் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.