பெண்ணை கொலை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது

 trichy man was arrested under the gangster law

கடந்த ஜூலை மாதம் 11ஆம்தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றின் நடுவே உள்ள மணல்திட்டு புதரில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சந்தேப்படும்படியாக இறந்து கிடப்பதாக வெள்ளி திருமுத்தம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்படி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாகநடைபெற்றபுலன் விசாரணையில், சம்பவ இடத்தில் இறந்து கிடந்த பெண் திருச்சி மாவட்டம் முதுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதனைதொடர்ந்து நடைபெற்ற விசாரணையில்அந்த பெண்ணை கொலை செய்தவர் திருச்சி மாவட்டம், கள்ளகுடியைச் சேர்ந்த நாகராஜ்(53) என்பது தெரியவந்ததையடுத்து, போலீசார் அவரை கைது திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் விசாரணையில், நாகராஜ் குற்றச் செயல் புரியும் எண்ணம் கொண்டவர் என்பதாலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், நாகராஜின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின்படிநாகராஜைதிருச்சி மாநகர காவல் ஆணையர் ஜி. கார்த்திகேயன்குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள நாகராஜனிடம்குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும், சிறையில் அடைக்கப்பட்டார்.

arrested police trichy
இதையும் படியுங்கள்
Subscribe