/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/car-art1.jpg)
மதுபோதையில் காரின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.பி.ராகுல் (வயது 36). இவர் அகில இந்திய இந்து மகா சபா அமைப்பின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் தனது காரை வீட்டின் அருகே முனீஸ்வரன் கோவில் பக்கத்தில் நிறுத்தி இருந்தார். அப்போது, அங்கு சிலர் மது போதையில் ராகுலிடம் தகராறு செய்துள்ளனர். இதனிடையே அவர்களில் ஒருவர் ராகுல் காரின் பின் பகுதியில் உள்ள கண்ணாடியை கையால் அடித்து உடைத்துள்ளார். இது குறித்து ராகுல் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப் பதிவு செய்து மலைக்கோட்டை அரச மர தெருவைச் சேர்ந்த ராஜ்மோகன் (வயது 22) என்பவரைத்தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)