Advertisment

மேஜர் சரவணன் நினைவு தினம்; அமைச்சர் மரியாதை

trichy major saravanan anniversary pay tribute minister anbil mahesh poyyamozhi 

மேஜர் சரவணனின் 24 ஆம் ஆண்டு நினைவு தினம்;அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அஞ்சலி செலுத்தினார்.

Advertisment

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி அவர்களது இரண்டு முகாம்களை தனது ஏவுகணைகளால் தாக்கி அவற்றை முழுவதும் அழித்து விட்டு பின்னர் முதல் ராணுவ அதிகாரியாக வீர மரணம் அடைந்தார்திருச்சியைச் சார்ந்த மேஜர் சரவணன். அவரது வீர தீரச் செயல்களைப் பாராட்டி இந்திய அரசு ‘படாலிக் நாயகன்' என்றும் நம் நாட்டின் உயரிய விருதான ‘வீர சக்கரா’ என்ற விருதையும் வழங்கி கௌரவித்தது.

Advertisment

அவரது 24 ஆம் ஆண்டு நினைவு விழாவை முன்னிட்டு அவரது நினைவகத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்ய மேஜர் சரவணன் அறக்கட்டளை சார்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe