/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1204.jpg)
திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் வசித்துவரும் கிருஷ்ணன் -ஜோதி தம்பதியினரின்மகன் மணிகண்டன் (வயது 23). இந்தப் பகுதியில் டிரைவராக பணியாற்றிவருகிறார்.இதேபோல் எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் - தனலட்சுமி தம்பதியின் மகள் சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 19).
இந்நிலையில், மணிகண்டன், சந்தியா இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்துவந்துள்ளனர்.சந்தியாவின் பெற்றோர்கள் அவருக்கு வேறொரு நபருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்ததால் காதலர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறினர்.
வெளியேறிய அவர்கள்,திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திடீரென சந்தியாவின் தாய் தனலட்சுமி, தனது மகள் கழுத்தில் தாலி இருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்து தாலியை அறுத்து எறிந்தார்.உடனே அங்கிருந்த பெண் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இந்தச் சம்பவத்தால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)