Advertisment

திருச்சி சட்டகல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி!

திருச்சி சட்டகல்லூரியில் 2 ஆம் ஆண்டு படிக்கும் மாணவி பிரியா. இவருக்கு சொந்த ஊர் கும்பகோணம் ஆகும். தன் கல்லூரி நண்பர்களோடு காஜாமலையில் உள்ள முஸ்லீம் தெருவில் வீடு எடுத்து தங்கி படித்து வருகிறார். கல்லூரி விடுமுறை என்பதால் நண்பர்கள் எல்லோரும் ஊருக்கு சென்ற நிலையில், தனியே இருந்த பிரியாவை இன்று மதியம் போல் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒரு வாலிபன் தவச்செல்வன் என்பவர் காஜாமலை பிரியா தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி செய்திருக்கிறார்.

Advertisment

trichy law college women student incident admit at govt hospital

இதில் பிரியாவின் உடல் 50 சதவீதம் எரிந்த நிலையில், அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர் உடனே ஓடி வந்து பிரியாவை மீட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். பிரியாவின் அலரல் சத்தம் கேட்டு பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வருவதை அறிந்த தவச்செல்வன் தப்பி ஓடி தலைமறைவானார். இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தவச்செல்வனை தேடி வருகின்றன. உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பிரியாவிடம் காவல்துறை விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு தலைபட்ச காதல் விவகாரம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisment

govt hospital Law college students trichy Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe