Skip to main content

திருச்சி சட்டகல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி!

Published on 22/07/2019 | Edited on 23/07/2019

திருச்சி சட்டகல்லூரியில் 2 ஆம் ஆண்டு படிக்கும் மாணவி பிரியா. இவருக்கு சொந்த ஊர் கும்பகோணம் ஆகும்.  தன் கல்லூரி நண்பர்களோடு காஜாமலையில் உள்ள முஸ்லீம் தெருவில் வீடு எடுத்து தங்கி படித்து வருகிறார். கல்லூரி விடுமுறை  என்பதால் நண்பர்கள் எல்லோரும் ஊருக்கு சென்ற நிலையில், தனியே இருந்த பிரியாவை இன்று மதியம் போல் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒரு வாலிபன் தவச்செல்வன் என்பவர் காஜாமலை பிரியா தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி செய்திருக்கிறார்.

 

 

 

trichy law college women student incident admit at govt hospital

 

 

இதில் பிரியாவின் உடல் 50 சதவீதம் எரிந்த நிலையில், அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர் உடனே ஓடி வந்து பிரியாவை மீட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். பிரியாவின் அலரல் சத்தம் கேட்டு பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வருவதை அறிந்த தவச்செல்வன் தப்பி ஓடி தலைமறைவானார். இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தவச்செல்வனை தேடி வருகின்றன. உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பிரியாவிடம் காவல்துறை விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு தலைபட்ச காதல் விவகாரம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.