Advertisment

பாலியல் தொல்லை கொடுத்த மாணவனுக்கு இதுதான் தண்டனையா..? கொதிக்கும் பல்கலைகழக மாணவிகள் !

பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது வெட்கக்கேடான மனித உரிமை மீறலாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடரும் வரை, சமத்துவம் மற்றும் வளர்ச்சி அடைந்து விட்டதாகப் பெண்கள் உரிமை கோர முடியாது. பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கடமை. பணியிடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களுக்குக் கருணை காட்ட முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையான உத்தரவு பிறப்பித்த நிலையில், திருச்சியில் தேசிய சட்டக்கல்லூரியில் படிக்கும் சக மாணவர் மீது மாணவிகள் பாலியல் புகார் கொடுத்தும் அதன் மீது சரியான நடவடிக்கை இல்லை என்று எதிர்குரல் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

trichy law college issue

திருச்சியில் ஸ்ரீரங்கம் தொகுதியில் திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ளது. தேசிய சட்டக்கல்லூரி. இந்தக் கல்லூரியில் இந்தியா முழுவதிலும் இருந்து மாணவ மாணவிகள் படிக்கிறார்கள். இந்தக் கல்லூரியில் கல்லூரி இறுதி ஆண்டுத் தேர்வு எழுதிவிட்டுத் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் ஒரு மாணவன், கடந்த மே மாதம் நடைபெற்ற கல்லூரி நிறைவு நாள் விழாவில் தனக்குப் பாலியல் தொல்லைக்கொடுத்தாக மாணவி ஒருவர் கல்லூரி புகார் குழுவிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த மாணவியின் புகார் கல்லூரி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த மாணவனின் மீது அடுத்தது புகார் வர துவங்கி 3 மாணவிகள் தொடர்ச்சியாகப் புகார் அளித்தனர்.

Advertisment

இந்த நிலையில் கல்லூரி விசாரணைக்குழு நடத்திய விசாரணை அடிப்படையில் அந்த மாணவன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த அறிக்கையைப் பல்கலைகழகத் துணைவேந்தருக்கு அனுப்பி உள்ளது.

இந்த நடவடிக்கை அறிக்கையில் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட மாணவன் குறைந்தது 5 மாதங்களுக்குச் சமூகப்பணியில் ஈடுபட வேண்டும். அதுவரை அந்த மாணவனின் கடைசிப் பருவத்தேர்வு முடிவுகளை வெளிடக்கூடாது. அந்த மாணவர் ஏதேனும் விருது அல்லது அங்கீகாரம் அளிக்கத் தேர்வு செய்யப்பட்டிருப்பின் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பல்கலைகழக வளாகப் புகார் குழு அளித்த பரிந்துரை மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். பாலியல் தொல்லை கொடுத்த அந்த மாணவருக்கு பல்கலைகழகம் வழங்கும் டிசியில் நன்னடத்தையில் பாலியல் தொல்லை புகார் குறித்துக் குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe