திருச்சி லலிதா நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டன் மற்றும் சுரேஷ் உள்ளிட்ட இருவர் ஏற்கனவே கைதான நிலையில் மேலும் ஒருவர் கைது. திருவாரூர் மாவட்டம் சீராத்தோப்பை சேர்ந்த முரளி என்பவரை திருச்சி காவல்துறை கைது செய்துள்ளது. இவர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தலைவனாக செயல்பட்ட பிரபல கொள்ளையன் முருகனின் அண்ணன் மகன் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

trichy lalithaa jewellery issue other one thief arrested police investigation

Advertisment

கைது செய்யப்பட்ட முரளியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையனின்கூட்டாளி கைது மூலம் கொள்ளையன் முருகனை தனிப்படை காவல்துறையினர் விரைவில் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டன் மற்றும் சுரேஷ், சுரேஷின் தாயார் கனகவல்லி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.