Advertisment

ஒரு கிலோ தங்கம் போலீசிடம் உள்ளது- சுரேஷ் பகீர் தகவல்!

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளில், ஒரு கிலோ தங்கம் திருவாரூர் காவல்துறையினரிடம் இருக்கிறது.திருச்சி மாவட்ட நீதிமன்றத்துக்கு சுரேஷை காவல்துறையினர் அழைத்து வந்த போது, பத்திரிகையாளர்களிடம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

trichy lalitha jewellery thief suresh said 1 kg gold thiruvarur police

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ், திருச்சி நீதிமன்றத்துக்கு இன்று (04.12.2019) அழைத்து வந்தனர். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, நான் பதுக்கி வைத்திருந்த 5.700 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துவிட்டு 4.700 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறுகிறார்கள். மீதம் ஒரு கிலோ தங்கத்தை திருவாரூர் காவல் துறையினரே வைத்துக் கொண்டனர். அக்டோபர் 3- ஆம் தேதி மாலை 05.00 மணிக்கு மணிகண்டனை கைது செய்துவிட்டு 10.00 மணிக்கு கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். என் மீது 15 வழக்குகளை பதிவு செய்துள்ளார்கள்.

நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், சுரேஷ் காவல்துறையினர் பற்றி இவ்வாறு பரபரப்பான புகார்களைக் கூறியிருப்பது அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.

1 kg gold police court suresh thief lalitha jewellery trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe