Advertisment

இளம்பெண்ணை படம் பிடித்த வாலிபர் அடித்துக் கொலை; மூன்று பேர் கைது

trichy kapiriyelpuram young woman photo captured incident 

Advertisment

திருச்சி மாவட்டம் லால்குடி கபிரியேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் லூர்து ஜெயக்குமார் (வயது 27). இவரும், இவருடைய சகோதரரான தாமஸ் ஆகிய இருவரும் நேற்று சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி மாந்துறை கபிரியேல்புரம் பகுதிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, மாந்துறை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கேலி கிண்டல் செய்து செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த இளம்பெண், பிரச்சனை குறித்து தன்னுடைய சகோதரர் குப்புசாமியிடம் (வயது 22) கூறிய நிலையில், அவர் தன்னுடைய நண்பர்களான பாண்டியன்(வயது 28), சிவா (வயது 25). உள்ளிட்ட ஐந்து பேர் கபிரியேல்புரம் பேருந்து நிலையத்திற்கு வந்து காத்திருந்து பேருந்து நிலையத்தில் இறங்கிய லூர்து ஜெயக்குமார் மற்றும் தாமஸ் ஆகிய இருவரையும் மாந்துறை சிவன் கோவில் அருகே அழைத்துச் சென்று இருவரையும் சரமாரியாகத்தாக்கியுள்ளனர்.

அதில் லூர்து ஜெயக்குமார் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த நிலையில் அதே இடத்தில்விட்டுச் சென்றுள்ளனர். மயங்கிக் கிடப்பவரை அப்பகுதியினர் பார்த்து திருச்சி லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பதற்கு கொண்டு சென்றபோது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத்தெரிவித்துள்ளனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தகாவல்துறையினர், ஜெயக்குமாரை அடித்து தாக்கி கொலை செய்த குப்புசாமி, பாண்டியன் மற்றும் சிவா ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் இருவரைத்தேடி வருகின்றனர்.

hospital Photos police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe