Advertisment

திருச்சி காணக்கிளியநல்லூர் கோவில் குடமுழுக்கு விழா; அமைச்சர்கள் பங்கேற்பு

trichy kanakiliyanallur temple celebration ministries nehru and sekar babu particpated

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியம், காணக்கிளியநல்லூர் கிராமத்தில் எல்லையம்மன்,ரேணுகாதேவி, ஜமதக்னி, பாப்பாத்தி அம்மன் மற்றும் காலபைரவர் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டதைதொடர்ந்து இன்று (24.03.2023) வெள்ளிக்கிழமைகுடமுழுக்குநடைபெற்றது.

Advertisment

கடந்த 21ம்தேதி காலை 8 மணிக்கு அனுக்ஞைவிக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று வியாழக்கிழமை 2 மற்றும் 3-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. சரியாக 9.15 மணிக்கு மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் மூலம் புனிதநீர் எடுத்துச் செல்லப்பட்டு சரியாக 9.30 மணிக்கு கலசங்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. அய்யாவாடி சர்வ சாதகர் தண்டபாணி சிவாச்சாரியார் தலைமை தாங்கினார்.

Advertisment

இந்த கோவில் புனரமைப்பு மற்றும் குடமுழுக்குபணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் காணக்கிளியநல்லூர் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், அமைச்சர் நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் தொழிலதிபர் கே.என். அருண் நேரு மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார்,மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

trichy temple
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe