Skip to main content

திருச்சி காணக்கிளியநல்லூர் கோவில் குடமுழுக்கு விழா; அமைச்சர்கள் பங்கேற்பு

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

trichy kanakiliyanallur temple celebration ministries nehru and sekar babu particpated

 

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியம், காணக்கிளியநல்லூர் கிராமத்தில் எல்லையம்மன்,ரேணுகாதேவி, ஜமதக்னி, பாப்பாத்தி அம்மன் மற்றும் காலபைரவர் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (24.03.2023) வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

 

கடந்த 21ம் தேதி காலை 8 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று வியாழக்கிழமை 2 மற்றும் 3-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. சரியாக 9.15 மணிக்கு மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் மூலம் புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு சரியாக 9.30 மணிக்கு கலசங்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. அய்யாவாடி சர்வ சாதகர் தண்டபாணி சிவாச்சாரியார் தலைமை தாங்கினார்.

 

இந்த கோவில் புனரமைப்பு மற்றும் குடமுழுக்கு பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் காணக்கிளியநல்லூர் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், அமைச்சர் நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் தொழிலதிபர் கே.என். அருண் நேரு மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார்,மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ - வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Vellore Collector warns that action will be taken against sale of illicit liquor

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கள்ள சந்தையில் மது விற்பனை தொடர்பாக நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 57 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக மாவட்டம் முழுவதும் மற்றும் அணைக்கட்டு, ஒடுக்கத்தூர், பேர்ணாம்பட்டு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் தீவிர சாராயத் தேடுதல் வேட்டை  நடைபெற்று வருகிறது. இதில் பேரணாம்பட்டு சாத்கர் மலைப்பகுதியில் வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் நேரடியாக களத்தில் இறங்கி சோதனை மேற்கொண்டு தீவிரம் காட்டி வருகிறார்.

மேலும் மலைப்பகுதியில் ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் கள்ளச்சாராய ஊரல்கள் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் பொருட்களை கண்டுபிடித்து  அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

அப்போது பேசிய ஆட்சியர் சுப்புலெட்சுமி, "வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கும்பொருட்டு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. அதன்படி மாவட்டத்திலுள்ள 20 உள்வட்டங்களுக்கு தலா 1 குழு வீதம் 20 குழுக்களும், மாவட்டத்திலுள்ள 5 மலைக் கிராமங்களுக்கு 1 குழு வீதம் 5 குழுக்களும் என மொத்தம் 25 குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.

மலைக் கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வனத்துறையின் சார்பில் சோதனை சாவடிகளில் கண்காணிப்பினை தீவிரப்படுத்த வேண்டும். காவல்துறையின் சார்பில் வனத்துறையினருக்கு சோதனை சாவடிகளுக்கு தேவையான முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். மேலும் வனத்துறையின் சார்பில் வனப்பகுதிகளில் அவ்வப்பொழுது திடீர் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

போதைப் பொருட்களின் விற்பனை கண்டறியப்பட்டால் தொடர்புடைய வணிக நிறுவனம் அல்லது கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்துதுறை அலுவலர்களும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தங்களுக்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். உத்தரவை பின்பற்றாத அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், "என எச்சரிக்கை விடுத்தார்.

Next Story

கொள்ளிடம் ஆற்றில் மாயமான சிறுவன்; தீவிர தேடுதல் பணியில் மீட்புப் படையினர்

Published on 22/06/2024 | Edited on 23/06/2024
The Mysterious Boy in the Kollidam River; Rescuers in intensive search

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான பத்தாம் வகுப்பு மாணவனை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.

திருச்சி கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகில் சுமார் 6 அடி உயர தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்தப் பகுதியில் குளிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன் இன்று மதியம் தடுப்பணையில் நிரம்பியுள்ள நீரில் குளிக்க வந்துள்ளார். திடீரென சிறுவன் காணாமல் போன நிலையில் பதற்றமடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த மீட்புப் படையினர் தொடர்ந்து சிறுவனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

The website encountered an unexpected error. Please try again later.