/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art hand cop_14.jpg)
திருச்சி கல்லுக்குழி ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தராமசாமி என்பவரது மகன் தமிழ் குடிமகன் (வயது 32). இவர் ஆன்லைன் மூலம் வீடு சுத்தம் செய்யும் பணிகளை ஆட்களை வைத்து செய்து வருகிறார். இவரது நிறுவனத்தில் திருச்சி உறையூரைச் சேர்ந்த அப்பாஸ் என்கிற பாலகுமார், திருவரங்கத்தை சேர்ந்த கார்த்திக், உறையூரைச் சேர்ந்த ஹரி என்கிற ஹரிஹரன் ஆகிய மூன்று பேர் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில், இந்த மூன்று பேரில் ஒருவரின் செல்போன் காணாமல் போய்விட்டது. இதையடுத்து ஊழியர்கள் மூன்று பேரும் உரிமையாளரிடம் போய் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றியதால் மூன்று பேரும் சேர்ந்து தமிழ் குடிமகனை தகாத வார்த்தைகளால் பேசித்தாக்கினர்.
இது குறித்து தமிழ் குடிமகன் கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா வழக்கு பதிந்து அப்பாஸ் என்கிற பாலகுமார், கார்த்திக், ஹரி என்கிற ஹரிஹரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.
Follow Us