trichy junction railway police search

Advertisment

திருச்சி ரயில்வே நிலையத்துக்கு இன்று (22/05/2022) வந்து சேர்ந்த புவனேஸ்வர் விரைவு ரயிலில் உள்ள முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த இரண்டு பை மூட்டைகளை கைப்பற்றிய ரயில்வே காவல்துறையைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு காவலர்களான உதவி ஆய்வாளர் பிரேம்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட காவலர்கள் அதிரடியாக சோதனை செய்தனர்.

trichy junction railway police search

அந்த இரண்டு மூட்டைகளிலும் சுமார் 20 கிலோ எடையுள்ள கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.