/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/art-trichy-ganja_0.jpg)
தமிழகத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை கடத்துவதும்பயன்படுத்துவதும் சட்டவிரோதச் செயல் என்ற போதிலும்,சமீபகாலமாக தமிழகத்தில் கஞ்சா கடத்தல்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், திருச்சியில் இது தொடர்பாக மேலும் ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள துறையூர் அமலாக்கப் பணியகத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாகக் கிடைத்த ரகசியத்தகவலின் பேரில், பொறுப்பு காவல் ஆய்வாளர் ஜெயசித்ரா தலைமையில் காவல்துறையினர் வாழ்வில் புத்தூர் சோதனைச் சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு வந்த சிவப்பு நிற மாருதி காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அந்தக் காரில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 40000 ரூபாய் ஆகும். உடனடியாக கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சாவைக் கடத்திவந்த மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)