
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் ஒரு ஆண் பயணியை சோதனை செய்தபோது அவர் கொண்டு வந்த உடைமையில் கார் ஆடியோ சிஸ்டமில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட 10 தகடு வடிவிலான 480 கிராம் தங்கத்தையும், அதேபோல் அவர் கைப்பையில் கொண்டு வந்த 180 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்தப் பயணியிடம் இருந்து மொத்தம் 638 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு 38 லட்சத்து 73 ஆயிரத்து 936 ரூபாய் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டது. இந்த சம்பவதால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.