திருச்சி விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை கூட்டம்

trichy international airport committee meeting 

திருச்சி பன்னாட்டு விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம் விமான நிலைய குழுவின் தலைவரானதிருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா தலைமையில் நடைபெற்றது.

திருச்சி பன்னாட்டு விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை மற்றும் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை சம்பந்தமாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த குழுவில் விமானநிலைய பாதுகாப்பு குழு, பாதுகாப்பு பிரிவு, இந்திய விமானப்படை, தேசியப் பாதுகாப்பு படை, குடியேற்றப் பணியகம், சுங்கத்துறையினர், உளவுத்துறை பணியகம், சிறப்பு பணியகம், திருச்சிமக்கள் தொடர்புத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகள், விமானநிலைய அதிகாரிகள்மற்றும் அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்களின் பொறுப்பு அதிகாரிகள் ஆகியோரைஉறுப்பினர்களாகக்கொண்டு இக்கூட்டம் நடத்தப்பட்டது.

Meeting trichy
இதையும் படியுங்கள்
Subscribe