திருச்சி மாவட்டம், புலிவலம் குருவிகாரன்குளம் கிராமத்தில் வசித்துவருபவர் கூலித் தொழிலாளியான குமார் (45).இவருக்கும்அதே ஊரில் வசித்துவரும் கிருஷ்ணன் (47) மற்றும் கார்த்திக் (23) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்துள்ளது.
அந்த முன்விரோதம் காரணமாக அடிக்கடி அவர்களுக்குள் தகராறுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், கிருஷ்ணன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், கிருஷ்ணன் என்பவர் குமாரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் குமாரின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து படுகாயமடைந்த குமாரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.