தாயை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் கணேசபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு வெண்ணிலா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வெண்ணிலாவுக்கும், பிரகாஷின் தாய் பாப்பாத்திக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சில தினங்களுக்கு முன்பு தனது மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு விட்டு பிரகாஷ் வந்துள்ளார். அதன் பிறகு மீண்டும் வீட்டிற்கு வந்த வெண்ணிலாவுக்கும், பிரகாஷின் தாய்க்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கடும் ஆத்திரமடைந்த பிரகாஷ் தாயை சரமாரியாக தாக்கினார். இதை தடுக்க வந்த தந்தை அறுமுகத்தையும் பிரகாஷ் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

TRICHY INCIDENT MOTHER AND SON FIGHT POLICE INVESTIGATION

Advertisment

Advertisment

இதில் சம்பவ இடத்திலேயே தாய் பாப்பாத்தி உயிரிழந்தார். மேலும் பிரகாஷின் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பிரகாஷை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.