
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் எலி மருந்து சாப்பிட்டு 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மணப்பாறை அருகே பொன்னம்பலம்பட்டியில் வசித்துவரும் நித்யா, கணவருடன் ஏற்பட்ட தகராறில் தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார். இந்நிலையில், தானும் எலி மருந்து சாப்பிட்டு, குழந்தைகளுக்கும் மருந்து கொடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். எலி மருந்து சாப்பிட்ட தாய் நித்யா, பிள்ளைகள் ரோஹித் (4 வயது), நல்லகண்ணு (7 வயது) ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Follow Us