இன்று பிப்ரவரி 14 காதலர் தினம். பூங்கா உள்ளிட்ட முக்கியமான பல இடங்களில் காதலர்கள் கூடுவதை தடுக்கும் சிலர் உள்ளனர். இந்த நிலையில் தான் திருச்சி மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் ஒரு காதல் கடிதம் எழுதி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
காதலர் தினம் காலங்காலமாய் இருந்தாலும்
காக்கியும் நானும் காதல் கொண்டது
காக்கியை அடையாளமாக்கிய பின்பு தான்.. என்று தொடங்கும் அந்த காதல் கவிதையின் முடிவில்..
காக்கியின் காதலோடு கை பிடித்தவளி(ரி)ன்
காதலும் சேரும் போது கலையாத காவியமாய்
காவலும், காக்கியும், காதலும் வாழ்க்கையும் வலுப் பெறுகின்றன.. என்று முடிகிறது.
இந்த காதல் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.