பிரிந்து சென்ற மனைவி; தற்கொலை செய்து கொண்ட கணவர்

trichy  husband and wife issue police investigated 

மனைவி பிரிந்து சென்ற நிலையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

திருச்சி பொன்மலைப்பட்டி சாந்தி தெருவைச் சேர்ந்தவர் லூயிஸ் பிரவீன் ராஜ் (வயது 37). இவர் அதே பகுதியில் உள்ள பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். பிரவீன் ராஜ்க்கு குடிப்பழக்கம் இருந்த காரணத்தால் வேலைக்குச் சரியாகச் செல்லாமல் வேலையை விட்டுவிட்டார். மேலும், மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால்இவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த லூயிஸ் பிரவீன் ராஜ் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனையறிந்த போலீசார்சம்பவஇடத்திற்கு விரைந்து சென்றுலூயிஸ் பிரவீன் ராஜீன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

police trichy
இதையும் படியுங்கள்
Subscribe