Advertisment

திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் கட்டாய பண வசூல் !

திருச்சி மாவட்டத்தைச் சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்தது தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து போகிறார்கள். ஏழைகளுக்கு இரட்சகராக இருக்கும் அரசுமருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் அவர்களின் இயலாமையை பயன்படுத்தி பணம்வசூல் செய்கிறார்கள் என்கிற குற்றச்ச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisment

t

இது குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் கொடுத்தனர்.

Advertisment

அந்த புகார் மனுவில், திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளாகவும் உள்நோயாளிகளாகவும் இருப்பவர்களிடமும் மேலும் அவர்களின் உறவினர்களிடமும் கட்டாயமாக பணம் வசூலிப்பதாகவும், மருத்துவமனை ஊழியர்கள் தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

t

குறிப்பாக பிரசவ வார்டில் உள்ள செவிலியர்கள் பெண்களிடம் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர்களின் உறவினர்களையும் கொச்சைப்படுத்துவதாகவும் புகார் மனுவில் கூறியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக விசாரணை நடத்தி அரசு மருத்துவமனையின் மாண்பையும் நோயாளிகளின் கண்ணியத்தையும் காத்திட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மாவட்ட பொறுப்பாளர் மைதீன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் தர்கா பாரூக் ஜமாலுதீன் அந்தோணிராஜ் தென்னூர் சதாம் முகமது பீர்ஷா ஜுபேர் அஹமத் புரோஸ்கான் மற்றும் கிளைகழக நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து புகார் மனுவை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கொடுத்தனர்.

trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe