திருச்சி அரசு மருத்துவமனை என்பது திருச்சி மாவட்டத்தை சுற்றி உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அரசு மருத்துவமனை 100 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் திருவரம்பூர் சர்க்கார் பாளையத்தை சேர்ந்த அனு ஜெயஸ்ரீ என்கிற தனியே நடக்க முடியாத மாற்றுத்திறனாளி சிறுமி உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது பாதுகாவலரான தாய் ஜேம்ஸ் மேரி தன் மகளுக்கு உணவு ஊட்டி விட்டுக் கொண்டிருந்த போது அரசு மருத்துவமனையில் உள்ள சீலிங் ஃபேன் கழன்று சிறுமி தலையில் விழுந்து விட்டது. இதனால் சிறுமியின் தலை பெரிய அளவில் வீங்கி உள்ளது. பணம் கட்டினால் தான் ஸ்கேன் எடுக்க முடியும் என நிர்வாகம் கறாராக சொல்லி விட்டது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
பணம் இல்லாத காரணத்தால் தான் அந்த ஏழைத்தாய் தன் மகளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். ஆனால் வந்த இடத்தில் மருத்துவமனையில் சிறுமியின் மீது சீலிங் பேன் விழுந்து பின் மண்டை வீக்கத்தோடும், வலியோடும் மகளை நான்கு நாட்களாக அருகில் இருந்து கவனித்து வருகிறார். பணம் கட்டினால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை என்றால் எதற்கு அரசு மருத்துவமனை என்கிற கேள்வி எழுகிறது.