Advertisment

தந்தை பெரியார் அரசு கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார்

trichy govt college students complaint with professors

Advertisment

தந்தை பெரியார் அரசுக் கல்லூரியில் பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள ஆங்கிலத் துறையின் தலைவரின் கீழ் பணியாற்ற முடியாது என பேராசிரியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்தலைவர் மீது பாலியல் புகாரைக் கூறி, தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி இருந்தார். இது குறித்து கல்லூரியின் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு மாணவியின் புகாரில் உண்மை இருப்பதை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநருக்கு அறிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், ஆங்கிலத்துறையில் பணியாற்றி 17 பேர் கல்லூரி முதல்வரைச் சந்தித்துக் கடிதம் அனுப்பியுள்ளனர். பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

college government student trichy
இதையும் படியுங்கள்
Subscribe