கரூர் மாவட்டம், வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த்(38).இவருக்குகடந்த ஒரு வருடகாலமாகதீராத தலைவலி இருந்து வந்துள்ளது. இந்தத் தலைவலி காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்நிலையில் தலைவலி குறையாத காரணத்தால் கடந்த மாதம் திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்குபரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது தலைப் பகுதியான மூளையின்பிட்யூட்டரிபகுதியில் கட்டிஇருப்பதைக்கண்டறிந்தனர். உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சைசெய்வதற்காககாது மூக்கு தொண்டை மருத்துவ குழுவினர்களான மருத்துவர் சதீஷ்குமார், மருத்துவர் அண்ணாமலை, மருத்துவர் கோகுல் ஆனந்த் மற்றும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்முத்துராமன்உள்ளிட்ட மருத்துவக் குழுவினரால் நோயாளிரஜினிகாந்தின்மூக்கின் வழியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூளைபகுதியிலிருந்தகட்டியை முழுவதுமாக அகற்றி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மேலும் தற்போது ரஜினிகாந்த் பூரண குணமடைந்த நிலையில், அரசு தலைமை மருத்துவமனைடீன்நேருவுக்கும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்து வீடு திரும்பி உள்ளார்.